Madhuvan Garden – “கற்களிலிருந்து கற்றலும், கற்றலில் இருந்து நாளைய வாழ்வாதாரமும்” – ஒரு சிறப்பு ஆசிரியையின் அனுபவம்

Madhuvan Garden – “கற்களிலிருந்து கற்றலும், கற்றலில் இருந்து நாளைய வாழ்வாதாரமும்” – ஒரு சிறப்பு ஆசிரியையின் அனுபவம்

Spread the love

சிறப்புக் குழந்தைகளுக்கான pre-vocational பயிற்சியாக உருவான Madhuvan Garden, ஜெயா கிருஷ்ணஸ்வாமி மேடம் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கிய ஒரு சிறிய கனவு.

தொடக்கத்தில் அந்த இடம் முழுவதும் கற்களும் அடர்ந்த புல்களும் நிறைந்திருந்தது. “இங்க செடி வளருமா?” என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்தது. ஆனால் பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவரும் சேர்ந்து தினமும் அந்த இடத்தை சுத்தம் செய்து முதல் செடிகளை நட்டனர் – ரணகள்ளி, மஞ்சள், கற்பூரவல்லி, துளசி, கீழாநெல்லி போன்றவை

அந்த சிறிய முயற்சி இன்று 38 வகை மூலிகைகள் வளர்ந்த பசுமையான தோட்டமாக மாறியுள்ளது.

14–18 வயது குழந்தைகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து வாரந்தோறும் garden activities-ல் ஈடுபடுகின்றனர். மண் கலத்தல், விதை நடுதல், தண்ணீர் ஊற்றுதல், களையெடுத்தல் பூ பரித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் குழந்தைகளின் fine motor skills, sensory learning, social skills இயல்பாக வளர்கின்றன.

செடி வளர்ப்பின் மூலம் அவர்கள் செடிகளின் பெயர்கள், பயன்கள், எண்ணிக்கை, அளவீடு, தண்ணீர் சிக்கனம், பொறுமை போன்ற வாழ்க்கைத் திறன்களை learning by doing முறையில் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்த தோட்டத்தில் வளர்ந்த துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகைகள் காயவைத்து பொடியாக செய்து பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று கூட வாரத்திற்கு இரண்டு நாட்கள் மூலிகை இலைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களுக்கு இந்த செடிகள் நினைவு பரிசாக வழங்கப்படுகின்றன.

பொங்கல் கொண்டாட்டத்திற்காக Madhuvan Garden-ல் விளைந்த மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு குழந்தைகளுக்கே வழங்கப்படுகிறது.

Madhuvan Garden ஒரு தோட்டம் மட்டும் அல்ல. கற்களால் நிறைந்த நிலத்தை நம்பிக்கையால் மாற்றியது போல, நம் சிறப்புக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு அழகான பயணம்.

Summary in English:

Madhuvan Garden began as a small dream under the guidance of Jaya Krishnaswamy Madam to provide pre-vocational training for special children. What was once a rocky, overgrown space was slowly transformed by the joint efforts of parents, teachers, and students into a thriving herbal garden with 38 varieties of plants. Through activities like planting, watering, and caring for the garden, children aged 14–18 learn practical life skills, sensory learning, and teamwork through hands-on experience. The herbs grown are also shared with parents and guests, making the garden both a learning space and a source of pride. Today, Madhuvan Garden stands as a beautiful symbol of how patience, care, and belief can nurture both plants and the future of special children. 

Share this post

Comment (1)

  • Sujatha Reply

    Beautifully said !
    Sowing a seed to building confidence to a child .

    April 6, 2026 at 10:30 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


BALAMANDIR BLOG