“Deva Amma to Uma Miss” – ஒரு தாயின் மாற்றம்!

“Deva Amma to Uma Miss” – ஒரு தாயின் மாற்றம்!

Spread the love

இரண்டரை வயதான என் மகனை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற இயல்பான எண்ணத்துடன்தான் என் பயணம் தொடங்கியது. ஆனால், அவன் வயதுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லாததை உணர்ந்தபோது என் மனம் திகைப்படைந்தது.

“என் குழந்தைக்கு என்ன ஆயிற்று?”, “எங்கு செல்வது?”, “யார் வழி காட்டுவார்கள்?” – இந்தக் கேள்விகளுடன் நான் தேடியபோது என் வாழ்வில் ஒளியாக வந்தது MNC – Madhuram Nayaranan Centre for Exceptional Children.

என் மகனின் வளர்ச்சி, சவால்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி seizures வருவதால் கற்றுக்கொள்ளும் திறன் இருந்தும், அவன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. “ஏன் எனக்கு மட்டும் இப்படிப்பட்ட சோதனை?” என்று கடவுளிடம் கேள்வி கேட்ட இரவுகளும் இருந்தன. ஆனால், அந்த கேள்விகளுக்கான பதில் மெதுவாக என் வாழ்க்கையிலேயே உருவாகிக் கொண்டிருந்தது.

மருத்துவ செலவுகள் என்னை பயமுறுத்திய காலத்தில், MNC மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பற்றி அறிந்தேன். அதைத்தொடர்ந்து, அரசு வழங்கிய மருத்துவ காப்பீட்டு திட்டம் என் மகனின் சிகிச்சைக்கு உறுதுணையாக அமைந்தது.

அந்த நிமிடத்தில் என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது — எனக்கு கிடைத்த இந்த உதவி என்னைப் போன்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் சென்றடைய வேண்டும். அதே நேரத்தில், நம் மையத்தைப் போன்ற ஒரு சிறப்பு பள்ளியை எதிர்காலத்தில் தொடங்க வேண்டும் என்ற ஒரு கனவும், ஒரு சிறிய விதையாக என் மனதில் விதைக்கப்பட்டது.

பெற்றோராக இங்கு வந்த நான், Caretaker ஆகவும், Helper-Teacher & Parent Coordinator ஆகவும் பணியாற்றினேன். பின்னர் AVMVK Academy-ல் Diploma in Early Childhood Special Education படித்து, Special Educator ஆனேன். மேற்கொண்டு B.Ed in Special Education படிப்பையும் முடித்தேன். Early Intervention ல் முதல் 5 ஆண்டுகளும், பின்னர் JIVIKAM Unit ல் 8 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் பணியாற்றி வருகிறேன்.

 “ஏன் எனக்கு மட்டும் இப்படிப்பட்ட குழந்தை?” என்ற கேள்வி இன்று,
“எனக்காகவே வந்த அரிய வரம்” என்ற நன்றியாக மாறிவிட்டது.

MNC-ல் நான் கற்றுக் கொண்டது: அன்பு. பாசம். அரவணைப்பு. ஆதரவு. சகிப்புத் தன்மை, பொறுமை.

ஒரு திகைப்புற்ற தாயாகத் தொடங்கிய என் பயணம், இன்று பல பெற்றோருக்கு துணையாக நிற்கும் ஆசிரியையாக மலர்ந்துள்ளது.

Summary in English:

The blog shares the inspiring transformation of a mother whose journey began when she realised her young son had developmental challenges and frequent seizures. While searching for help, she found support at MNC, which not only helped her son but also changed her own life. What started as a worried mother’s struggle gradually became a purpose. She got trained in special education and became a teacher. Today, the mother who once sought guidance, supports many other parents and children with compassion and hope.   

Share this post

Comment (1)

  • Sujatha Reply

    You are an inspiration to many parents .

    April 6, 2026 at 10:33 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


BALAMANDIR BLOG