BMRRC EVENT – A Presentation Of Activities & Displays And Games & Demonstrations on Early Childhood Care, Development, Education and Parenting
Anand Prabhakaran2024-07-10T13:02:38+05:30I have been working for BMRRC for the past 3 years. I have conducted many community programmes in the form of street play, mime, dance, etc., in the Gummidipondi area. On 29th June at the BMRRC showcase event our team got the opportunity to perform in the BMKT campus. The support given by the Bala Mandir staff for our programme was really good. Our field staff felt very special when the people like Maya amma, and Lakshmi Gopal madam appreciated our performance. They also had the opportunity to see all the programmes and activities in BMRRC. In this programme, I had the opportunity to showcase our project activities to the other Bala Mandir staff. I felt very happy in coordinating with other unit staff.
These were some feedback from our field staff who performed the ‘Street-theatre’ that I would like to share with you all
Ms. Rohini
பால மந்தரில் நாங்கள் அனைவரும் சேர்ந்து நடித்த மூளை வளர்ச்சி பற்றிய தெரு நாடகம் கும்மி பாட்டுஎனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த கருத்துக்களை நாங்கள் மக்களுக்கு சொன்னதினால் அவர்களும் மூளை வளர்ச்சி பற்றி தெரிந்து கொண்டார்கள். இது போன்ற பல நாடகங்கள் கும்மி பாட்டு போன்ற நிகழ்ச்சிகளை எங்கள் ஊர்களில் மக்கள் முன் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் சொல்லும் கருத்துக்கள் மூலம் இதைப் பற்றி தெரியாத மக்கள் பயன் பெறுகிறார்கள், இது மட்டுமல்லாமல் பாலமந்தரில் வந்து அனைத்து ஆசிரியர்களின் முன் நாங்கள் எங்கள் திறமைகளை வெளிகாட்டினதினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வாய்ப்பு எனக்கு புதுவிதமான அனுபவமாக இருந்தது. இது மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் ஆசிரியர்கள் எங்கள் நிகழ்ச்சிகளை அமைதியாக அமர்ந்து கவனித்து எங்களுக்கு கூறிய பாராட்டுக்கள் அறிவுரைகள் மேலும் இது போல் பலவிதமான நிகழ்ச்சிகளை செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தி பேசினது எனக்கு மிகவும் பிடித்தது இந்த வாய்ப்பினை கொடுத்த பாலமந்திர் ஆனந்த் சார்க்கு நன்றி.
Ms. Vinothini
29/6/2024 அன்று நிகழ்ச்சியில் நாங்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்து. பொதுவா நாங்க எங்க கிராமங்களில் ஆரம்பகால குழந்தை வளர்ச்சி பற்றி நாடகம் மூலமாகவும், கும்மி பாடல்கள் மூலமாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் IEC மூலமாக தான் மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இப்போ புதுமையாக நாங்க சென்னைக்கு வந்து உங்களிடத்தில் இந்த நிகழ்ச்சிகளை நடப்பித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நீங்கள் அனைவரும் எங்களை பாராட்டுவதன் மூலமாக எங்களுக்கு இன்னும் இதுபோல நிகழ்ச்சிகளை எங்க கிராமங்களில் இன்னும் அதிகமாக செய்வதில் எங்களுக்கு ஆர்வமாகவும் இருக்கு.

இந்த நிகழ்ச்சி எல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தன எங்க ஆனந்த்சார்க்கும் மிக்க நன்றி
Ms. Jeeva
பால மந்தரில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது பயனுள்ளதாகவும் இருந்தது. அங்கே நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் நாங்கள் நிறைய புதிய தகவல்களை கற்றுக் கொண்டோம் மேலும் அதை நாங்கள் எங்கள் கிராமங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என நினைக்கின்றோம். நாங்கள் எங்கள் கிராமங்களில் நடத்துற நிகழ்ச்சியை அங்கு பாலமந்தரில் எங்களது குழுவின் மூலமாக மூளை வளர்ச்சி பற்றி நடத்திய தெரு நாடகம் மற்றும் கும்மி பாடல் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளும் அனுபவங்களும் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தூண்டியது. இதுபோன்ற பல்வேறு முறைகள் மூலம் நாங்கள் எங்கள் கிராமங்களில் ஆரம்பகால குழந்தை வளர்ச்சியை பற்றிய தெரியாத மக்களுக்கு பல நல்ல தகவல்களை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது இந்த வாய்ப்பினை அளித்த பாலமந்தர் ஆசிரியர்களுக்கு நன்றி.
Ms. Nithyakalyani
எங்கள் குழு கடந்த மாதம் 29.6. 2024 அன்று காமராஜர் அறக்கட்டளையில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் நான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்து மூன்று வயது வரை படிப்படியாக வளருவதை மிகவும் அருமையாக செயல் முறையில் செய்து காட்டினார்கள் அதேபோல் நான் வேலை செய்யும் கிராமத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு நாடகத்தின் மூலமோ அல்லது விளையாட்டின் மூலமோ செயல் முறையில் மூலமாகவோ கூறினால் மக்களுக்கு சுலபமான முறையில் மிகவும் தெளிவாக சென்றடையும் என்பதனை நான் தெரிந்து கொண்டேன்.

எங்கள் குழு நடத்திய மூளை வளர்ச்சியை பற்றிய நாடகமும் கும்மி பாட்டும் மிகவும் அருமையாக இருந்தது எங்களுக்கு காமராஜர் அறக்கட்டளையின் மூலம் எங்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக இருந்தது நன்றி
Ms. Abirami
பாலமந்தர் காமராஜர் அறக்கட்டளை நடத்திய கலைநிகழ்ச்சி மற்றும் கும்மிபாட்டு நாங்கள் நடைத்திய தெரு கூத்து (மூளை வளர்ச்சி) எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலைநிகழ்ச்சி (கும்மிப்பாட்டு) மிகவும் பிடித்திருந்தது, நாடகம் (தெரு கூத்து) நாங்கள் ஒற்றுமையாக இருந்து தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து இந்த நிகழ்ச்சி நன்றாக முடித்தோம்.

இந்த நிகழ்ச்சி முதல் முறையாக நடத்தியது பயமாக இருந்தது. ஆனால் நாங்கள் இந்த நிகழ்ச்சி நன்றாக தன்னம்பிக்கை யுடன் நடத்தியற்கு திரு.ஆனந் சார், திரு,சதிஷ் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் கலைநிகழ்ச்சியை நடத்தியதை வேறு (ஆரம்ப கால குழந்தை வளர்ச்சி பற்றி) விழிப்புணர்வு இல்லாத கிராமங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்


Leave a Reply