விளக்கம் தேவை குழந்தைகளுக்கு -(Extracted from the Michellin Tyres  compilation)

விளக்கம் தேவை குழந்தைகளுக்கு -(Extracted from the Michellin Tyres  compilation)

Spread the love

விளக்கம் தேவை குழந்தைகளுக்கு

  • பெற்றோர்கள் அனைவருக்கும் தங்கள் குழந்தை ஒரு பொக்கிஷம். தங்கள்  குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தையே அவர்கள் விரும்புவார்கள்.  குழந்தைகளின் உடல் நலமட்டுமல்லாது அவர்களின் மன நலத்திலும் தாங்கள்  பெறும்      பங்கு வகிக்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
  • குழந்தைகளிடம்  நாம்   பேசும்போது     இதை செய்யாதே, அதை தொடாதே, இதை ஏன் செய்யவில்லை என்று, அவர்களிடம்  பேசுவது எல்லாமே எதிர் மறையாகவே உள்ளது. “நான் சொல்கிறேன் நீ செய்“ என்பது தான் எல்லாவற்றிக்கும் நாம் கொடுக்கும் பதில். இதனால் குழந்தைகளுக்கு வீண்  பிடிவாதமும் முரட்டுத்தனமும் அதிகரிக்குமே தவிர நம் சொல்லுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.  கொரோனா  காலத்தின் வாழ்க்கை முறையில் இது கூடுதலாகவே காணப்படுகிறது. இதற்கு நாம் ஓர் வழி காண வேண்டும்
  • பலகாலும் வீட்டுக் குழந்தைகளிடம்பேசும்போது , ஒன்றை ஏன், எப்படி செய்ய வேண்டும் என்பதை பொறுமையுடன் எடுத்துக் கூறி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.அவர்களுக்கு ஒவ்வொன்றிற்க்கும் விளக்கம் தேவைப்படுகிறது. விளக்கம் கிடைத்தவுடன் அவர்கள் அமைதியடைவார்கள். மேலும்படிப்பு நேரம் தவிர எந்நேரமும் செல் போன் கூடாது, வெளியில் கூட்டமாக விளையாடுவது , நண்பர்களிடம் உறவுமுறை எல்லாம்  மிகவும் குறைந்துவிட்டது. இப்படி பல கட்டுப்பாடுகள்  குழந்தைகளுக்கு  ஏற்பட்டுவிட்டது. இதை ஏன் செய்யக்கூடாது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை குழந்தைகளிடம் நிதானமாக விளக்கி பின்பு, இதற்கு  பதில்     என்னென்ன     வீட்டிலேயே  என்ன செய்யலாம் என்பதை அமைதியுடன் அவர்களிடம்  விளக்கிச் சொல்வது  அவசியம். அதற்கு தேவையான சூழலை அமைத்துக்கொடுத்தால் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.   
  • மேலும்    தினசரி செயல்பாடுகளில் ஒருவித ஒழுங்குமுறையை    அமைத்துக்கொடுத்து நேரப்படி தங்கள் பணிகளை முறையே செய்ய அவர்களை தயார் செய்யவும்.
  • ‘சொல்வது  வேறு  செய்வது வேறு’ என்றில்லாமல் நம் செய்யும் செயலும் பேசும் பேச்சும் ஒரே சீராக இருக்க வேண்டும். நாம் தான் அவர்களுக்கு முன்மாதிரி.
  • இந்த சூழலில் வீட்டில்  குழந்தைகளை எப்படி மகிழ்ச்சியுடன் வைப்பது ?? – இது பெற்றோர் கையில் தான் உள்ளது .குழந்தைகளை மகிழ்விக்க செல்போன் தான் வழி என்றில்லாமல் குழந்தைகளுடன் அதிக நேரம்  செலவழிப்பது, பாட்டுப்பாடி அவர்களுடன்   சேர்ந்து டான்ஸ் ஆடுவது பந்து விளையாட்டு, அவர்களுக்கு புத்தகம் படிப்பது என்று பலவற்றை பெற்றோர் செய்யலாம். இதில் தாய் தந்தை இருவருக்கும் பங்கு உள்ளது. வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே ஆர்வமூட்டும் விளையாட்டுகள் இவர்களுடன் விளையாடலாம் –  மனது வைத்தால் !
  • தங்களுக்கு விருப்பமானதை செய்ய   குழந்தைகளுக்கு        சுதந்திரம் அளித்து தங்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள அவர்களுக்கு ஊக்குதல் அளித்து,  அவர்களை தன்இச்சையாக செயல்பட்டு மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்க வழி வகுத்துக்கொடுக்கலாம்.      அவர்கள் நன்றாக ஒன்றை செய்யும்போது பாராட்டை அள்ளி வீசுவது  அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். .இப்படி செய்வதால்  அவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயலாற்றவும் , கிடைத்த  நேரத்தை  நல்லவிதமாக   பயன்படுத்தி  மகிழ்ச்சியுடன்  இருக்கவும்   கற்றுக் கொள்வார்கள்.  இந்த ஓர் அரிய வாழ்க்கை கல்வி அவர்களுக்கு காலத்துக்கும் உதவும்.
  • குழந்தைகளின் வளரும் பருவம் பொன்னானது. இது மலர்ச்சியுடன் கழிந்தால் வாழ்நாள் பூராவும் அவர்கள்நிறைவான, ஆனந்தமான வாழ்வு வாழ வழி வகுக்கும்.

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


BALAMANDIR BLOG